PARLIAMENT SPEECH OF HON.HMM.HAREES

அரசியலுற்கு அப்பால் இலங்கை வாழ் முஸ்லிம்களால் கம்பீரமான பிரதியமைச்சர் சட்டத்தரணி அல்ஹாஜ் HMM.ஹரிஸ் விஷேடமாக வாழ்த்த பட வேண்டும்.
சோதனைகள் பழக்கமான ஒன்றாகவும், சாதனைகள் உமக்கு நெருக்கமானதாகவும் இருக்க வேண்டும்.
DON PANED MEDIA
PUBLISHED ON 12.15AM 18.03.2018
Create by: raees akther

There is no video clip yet

There is no video clip yet

சமூக பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்கள் கலந்தாலோசனை

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயல்கள் இனிமேலும் நடவாது தடுப்பதற்கான செயற்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வலியுறுத்திக் கூறுவதற்கும், அண்மையில் நடைபெற்ற வன்செயல்கள் பற்றிய உரிய சான்றுகளை முன்வைப்பதற்கும் சேதங்கள் சரிவர மதிப்பீடு செய்யப்பட்டு அதிகபட்ச இழப்பீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதற்கும் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்தாலோசித்துள்ளனர். அத்துடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவுடனும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

 

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (13) இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் ஒன்றுகூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் இவைபற்றி ஆராய்ந்துள்ளனர். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர். முஸ்லிம் அமைச்சர்கள் சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கொழும்பில் இல்லாத நிலையில் இச்சந்திப்பில் பங்கேற்கவில்லை.
 
சமூக வலைத்தளங்களில் வெளிவரும் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்பூட்டும் பேச்சுக்களின் பாரதூரம் பற்றியும் அவற்றுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழு, காலக்கெடு விதிப்பு என்பனவற்றின் மீதும் கவனம் செலுத்தப்பட்டது. முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் கூடி நிலைமையை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவற்கு இணக்கம் காணப்பட்டது.
 
இக்கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா பேரத்தின் தலைவர் என்.எம்.அமீன், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா முக்கியஸ்தர்களான ஹில்மி அஹமட், அஸ்கர்கான் ஆகியோரும் அதில் இணைந்து கொண்டனர்
 

சமூக பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்கள் கலந்தாலோசனை

Related Articles

திகனயில் சிரமதானப் பணிகள் ஆரம்பம் (Photos)

 

29258494_10214275472575144_8623574429424680960_o

அண்மையில்  ஏற்பட்ட இனவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான திகன பிரதேசத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

கண்டி மாவட்ட செயலகம் மற்றும் இலங்கையின் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த சிரமதானப் பணிகள் பலகொல்ல பௌத்த மத்திய நிலையத்தின் தலைவர் ஹல்பொச தம்மஜோதி தேரர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த சிரமதானப் பணிகளில் பிரதேச பௌத்த பிக்குமார், பிரதேச மதத் தலைவர்கள், முப்படை வீரர்கள், குண்டசாலை மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாக உதவி பிரதேச செயலாளர் கெளஷல்யாதர்மபால தெரிவித்தார்.

இன்று காலை 10 மணியளவில் பாதிக்கப்பட்ட திகன மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் ஆரம்பமான சிரமதானப் பணிகள் மாலை 5 மணிவரைக்கும் நடைபெறவுள்ளது. இந்த சிரமதானப் பணிகளில் பொதுமக்களும் இணைந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சிரமதானப் பணிகளில், 225 இராணுவத்தினர் இணைந்துகொண்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான லீடர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவல தெரிவித்தார்.(ஸ)

29313483_10214275468295037_2237970517208334336_o29313092_10214275468575044_2311215656818704384_o29216151_10214275468735048_5984002685966221312_o29214725_10214275470615095_5967856980482588672_o29249356_10214275469855076_8714111618469855232_o29249305_10214275470935103_8025820706736439296_o29215995_10214275470775099_3663449310684512256_o29244568_10214275471095107_6534331495736147968_o29258494_10214275472575144_8623574429424680960_o0129313633_10214275472415140_7288907415137812480_o

 

ஜும்ஆ முடியும் வரை பௌத்த பிக்குகள் பள்ளிவாயலில் பாதுகாப்பு ஏற்பாடு

 

image_1319f0bfc8

கண்டி பிரதேசங்களிலுள்ள பல பள்ளிவாயல்களில் அப்பிரதேச பௌத்த பிக்குகள் கூடி இருந்து இன்றைய (16)  ஜும்ஆ தொழுகையை முஸ்லிம்கள் நிறைவேற்றுவதற்கு  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி கல்ஹின்ன பிரதான ஜும்ஆ பள்ளிவாயலில் தேரர்களுடன் அங்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உடகம தேவானந்த பாடசாலையின் அதிபர் ஆகியோர் தங்கியிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கியுள்ளனர். (மு)

image_1319f0bfc8image_bb62ca441e

image_0c91d2c42c

பிரதமரை திருப்திப் படுத்த பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக எடுக்கவிருந்த ஒழுக்காற்று நடவடிக்கை முயற்சி பெரும்பான்மையான உச்சபீட உறுப்பினர்களின் எதிர்ப்பினால் தோல்வி.

(றிஸ்கான் முஹம்மட்)
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இனவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிராக மிகக் காட்டமாக உரையாற்றியமை தொடர்பில் ஹரீசுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கட்சியின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் சிலரால் முன்மொழியப்பட்டது. 
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டம் நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைமையகமான தாறுஸ் ஸலாமில் 4 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றபோதே மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் முன்மொழியப்பட்டது.
 
இவ் உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சமகால இனவாத தாக்குதல் சம்பங்கள் மற்றும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.  
 
இதன்போது கட்சியின் செயலாளர் மற்றும் சில முக்கிய உறுப்பினர்கள், பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமருக்கு எதிராக பேசியமைக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்கள் நடந்தபோதிலும் பிரதமரையும் அரசையும் பாதுகாக்க வேண்டும், அரசாங்கத்தை நாங்கள் குற்றம் சாட்ட முடியாது, என்ன விடயம் நடந்தாலும் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற தொனியில் பேசிய இவர்கள் பிரதமருக்கு எதிராக பேசுவதற்கு இவருக்கு அனுமதி அளித்தது யார்? எனவும் வினாவெளிப்பினர்.  
 
இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பட்டும் படாமலும் சில விடயங்களை பேசுகின்றபோது உயர்பீட உறுப்பினர்களுள் பெரும்பான்மையானோர் ஒவ்வொருவராக எழுந்து பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு எதிராகப் பேசினர். 
 
உயர்பீட உறுப்பினர்கள் பலர் பேசுகையில், நாட்டில் முஸ்லிம் சமூகம் இருக்கின்ற நிலைமை தெரியாமல் பேசுகின்றீர்கள், முஸ்லிம் சமூகம் பெரும் ஆபத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் நடைபெற்ற இன வன்முறைச் சம்பவங்களின்போது அரசு உரிய நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியதனால் தான் இப் பெரும் கொடூரச் சம்வங்கள் நடந்துள்ளதாக முஸ்லிம் சமூகம் தீர்மானித்துள்ளது. இதனால் அரசின் மீதும் பிரதர் மீதும் முஸ்லிம் சமூகம் கடும் அதிருப்தியில் இருக்கின்றது.
 
பிரதி அமைச்சர் ஹரீஸ் அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் நடைபெற்ற இனவாத தாக்குதல் சம்பவங்களின்போது களத்திருந்து செயற்பட்டவர் என்றவகையில்; அம்மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு எமது சமூகத்தின் அதிருப்தியை பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார். அத்தோடு இச் சமூகத்தின் அவல நிலையை விரிவாக தெளிவுபடுத்தி இருக்கின்றார். 
 
குறித்த இனவாத சம்பவங்களின்போது களத்தில் நின்று செயற்பட்டதோடு பாராளுமன்றத்திலும் அது தொடர்பில் உணர்வுபூர்வமாக பேசியதனால் சமூகம் அவரை இன்று சமூகத்திற்காக குரல்கொடுக்கின்ற ஒருவர் என்று அடையாளம் கண்டிருக்கிறது. அதற்காக அவரை எல்லா மூலை முடுக்குகளிலும் பாராட்டுகின்றனர். இவரின் குறித்த பாராளுமன்ற உரையினால் கட்சியினுடைய ஆதரவுத் தளம் கூட பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.
 
இவ்வாறான ஒரு நிலைமையில் கட்சி இவரின் உரையை அனுமதிப்பதை விட்டு விட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்டால் கட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவும் வீழ்ச்சியும் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டியதோடு. கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கின்ற முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவ் உயர் பீட கூட்டத்திற்கு வருகை தந்திருந்த நாடு பூராகவும் உள்ள கட்சியின் முக்கியஸ்தகர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், உச்ச பீட உறுப்பினர்கள் எல்லோரும் பெரும்பான்மையாக எழுந்து நின்று கடுமையான முறையில் கட்சித் தலைமைக்கு வலியுறுத்தினர்.
 
இவ்வாறு பிரதி அமைச்சருக்கு ஆதரவாக கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பேசுவதையிட்டு கட்சித் தலைமை, ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்க முயற்சித்த கட்சியின் செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர் சிலரும் அதிர்ச்சியடைந்தனர். 
 
மேலும் பிரதி அமைச்சர் ஹரீசுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசியவர்கள் களத்திற்குச் செல்லாததனால் மக்களுடைய உணர்வை புரியாமல் இவ்வாறு பேசுகின்றார்கள் என சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். விரும்பியோ விரும்பாமலோ பிரதி அமைச்சர் களத்திலிருந்து அந்த மக்களின் உணர்வுகளுடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டார். இதனால் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ஒரு குறையுமில்லை. இதற்காக அவர் மீது யாரும் புறாமைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.  எனவே தலைவர் உடனடியாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் விடயத்தை கைவிட வேண்டும் என்று கோரினர்.
 
பெரும்பான்மையான கட்சியின் உறுப்பினர்கள் பிரதி அமைச்சருக்கு சார்பாக நியாயமாக பேசியதைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹரீஸ் அரசுக்கும் பிரதமருக்கும் எதிராக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. 
 
பிரதி அமைச்சர் ஹரீஸின் குறித்த பாராளுமன்ற உரையினால் பிரதமர் கடும் குழப்பத்திற்குள்ளாகி உள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் தொடர்புகொண்டு பேசியதனால் பிரதமரை திருப்திப்படுத்துவதற்காகவே குறித்த ஒழுக்காற்று முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அறியவருகிறது.   
 
 
 

 

இவ்வாறு முயற்சித்தமையினை கேள்வியுற்ற நாடு பூரகாவுமுள்ள முஸ்லிம் சமூகம் மிகுந்த ஆத்திரமும் ஆவேசியமும் அடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

speech on ZAHIRA COLLEGE KALMUNAI

DON PANED MEDIA

”நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது” : வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு !!

 

 கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்தார்.
 
நாட்டின் தற்போதைய நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதியினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூட்டப்பட்டிருந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கலவர சூழலை ஏற்படுத்த காரணமானவர்களையும் கலவரங்களில் ஈடுபட்டவர்களையும் கைதுசெய்து அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தான் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடர் இடம்பெறும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் செயற்பட்டுவருவது அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கடந்த மூன்று வருட காலமாக நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்பை செய்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்காலத்திலும் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, சட்டமும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 

இணைய வர்த்தகம் தொடர்பில் புதிய சட்டம்

 

shopping

இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்ட கட்டமைப்பு முறை ஒன்றை அறிமுகப்படுத்த நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈ-வர்த்தகம் சம்பந்தமாக இலங்கையில் தற்போதிருக்கின்ற சட்ட முறை பலவீனமானது என்பதுடன் அது சம்பந்தமாக சரியாக செயற்படக் கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பொன்று இல்லாமை பிரச்சினைக்குறியது என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக சர்வதேச வர்த்தக மத்திய நிலையத்துடன் இணைந்து ஈ-வர்த்தகம் சம்பந்தமாக புதிய சட்ட கட்டமைப்பு முறை ஒன்றை வகுப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

அரச நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் பங்களிப்புடன் இன்றும் (15) நாளையும் கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது.

தற்போது நாட்டின் சனத்தொகையில் 33 வீதமானோர் இணையப் பயன்பாட்டாளர்கள் என்பதுடன் அதில் அதிகமானவர்கள் 25 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டியில் இன்று சாதாரண நிலை, பொலிஸ் ஊரடங்கு இல்லை

8:39 pm March 10, 2018 

Ruwan-Gunasekera

கண்டி நிருவாக மாவட்டத்தில் தற்பொழுது நிலவும் சுமுகமான நிலைமையைக் கருத்தில் கொண்டு இன்று (10) அப்பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்  அமுல்படுத்தப்படாது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தற்பொழுது அப்பிரதேசத்தில் நிலைமை சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார். 

கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை முதல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை- பிரதமர்

3:58 pm March 10, 2018New_Layout__1_

 

திகன, கென்கல்ல, பல்லேகல, அகுரன ஆகிய பிரதேசங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நேரடியாக விஜயம் செய்து  நிலமையினை  பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், அப்பிரதேசங்களில் சேதமடைந்துள்ள பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்களையும் இதன்போது பிரதமர் பார்வையிட்டதுடன் பிரதேசவாசிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

மக்கள் சந்திப்பின் பின்னர்  கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட பாதுகாப்பு குழுக்கூட்டத்திலும் பிரதமர் கலந்துகொண்டுள்ளார். இதில் பிரதமர் கருத்துத் தெரிவிக்கையில்,

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனவாதத்தீயில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நஷ்ட ஈடுவழங்குமாறும் இந்நடவடிக்கையை நாளை முதலே ஆரம்பிக்குமாறும் பிரதமர் அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.

அத்துடன்,  அசம்பாவிதத்தில்  உயிரிழந்தவர்களுக்கு  ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 

கண்டி ,அம்பாறை தொடர்பில் UNHRC ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இப்படி கூறினார்

இலங்கைக்யில் இடம்பெறும் இனவாத வன்முறைகள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் UNHRC கூறும் அழுத்தமான செய்தி !!ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்றுவருகின்றது

தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

 

 

தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மார்பு அழகை காட்டும் உடை அணியும் உரிமை உங்களுக்கு இருப்பது போன்று அதனை மறைக்கும் உடை அணியும் உரிமை எங்களுக்கும் உண்டு -முஜிபுர்ரஹுமான் (MP)

அரபு நாடுகள், இலங்கை மீது அதிருப்தி - உறவுகள் பாதிக்கப்படலாம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் அரபு நாடுகள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 
 
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க அந்த நாடுகள் தீர்மானித்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இன்று -10-வெளியிட்டுள்ள செய்தி தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கொழும்பிலுள்ள அதன் தூதுவர்களூடாக முழுமையான விவரங்களைத் திரட்டிவரும் இந்த நாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதற்கெதிராக கூட்டு எதிர்ப்பை வெளியிட தீர்மானம் எடுத்துவருவதாக அரபு நாடொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பிலுள்ள உயர்மட்ட தூதுவரொருவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டங்களில் எதிர்த்து வாக்களித்தபோதும், இப்போது இலங்கையில் நடைபெறும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை நோக்குகையில் அந்த ஆதரவு நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலை எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
வன்முறைகள் குறித்து இலங்கை அரசும் முறையான தகவல்களை இராஜதந்திரிகளுக்கு வழங்காதிருப்பதன் மூலம் வன்முறைகள் தொடர்பிலான அரசின் உண்மைத்தன்மையை சந்தேகிக்கவேண்டியுள்ளதென்றும் மேற்படி தூதுவர் தெரிவித்தார்.
 
சவூதி அரேபியா, கட்டார், குவைத், பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேஷியா, ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தான், ஈரான்' உட்பட்ட நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த வன்முறைகள் குறித்து தீவிர கரிசனை கொண்டிருப்பதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளவும் உத்தேசித்துள்ளனர்.
 

 

இந்த வன்முறைகளால் அரபு நாடுகளுடனான வர்த்தக உறவுகளும் பாதிக்கப்படக் கூடுமென சொல்லப்படுகிறது” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PRAY FOR SYRIA

DON PANED MEDIA

அமைதியான முறையில் நிறைவடைந்த ஜூம்ஆ தொழுகைகள்

 

Screen Shot 2018-03-09 at 2.55.02 PM

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் ஜூம்ஆ தொழுகைகள் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆ தொழுகைகள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்ற போதும், கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சூழ்நிலையில் இன்றை ஜூம்ஆ தொழுகை மக்களில் மத்தியில் விசேட கவனத்தைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் முஸ்லிம் மக்கள் தத்தமது கிராமங்களில் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதுடன், இலங்கை பாதுகாப்புப் பிரிவும் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கியது. அதிலும் பிரச்சினைகள் உருவாக்கலாம் எனக் கருதிய பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன எம்மால் அவதானிக்க முடிந்ததது.

அதேவேளை அண்மைய இனவாத தாக்குதலுக்கு இலக்கான திகன பிரதேசத்தின் ஜூம்ஆ தொழுகை சேதமடைந்த பள்ளிவாசலின் வெளிப்புறத்திலும், பாடசாலை மைதானத்திலும் நடைபெற்றது.

Screen Shot 2018-03-09 at 2.53.19 PMScreen Shot 2018-03-09 at 2.53.14 PMScreen Shot 2018-03-09 at 2.53.04 PMScreen Shot 2018-03-09 at 2.52.58 PM

Screen Shot 2018-03-09 at 2.55.20 PMScreen Shot 2018-03-09 at 2.55.02 PM

தெஹிவளை பிலால் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜூம்ஆ தொழுகையின் போது, ரத்மலான மற்றும் கல்கிஸ்ஸை விகாரைகளின் தலைமை பிக்குமார் கலந்துகொண்டதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். (ஸ)

Screen Shot 2018-03-09 at 2.55.52 PM

There is no video clip yet

DON PANED MEDIA

There is no video clip yet

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையின்போது பிரதமருக்கு எதிராக செயற்பட வேண்டி ஏற்படும் - அரசுக்கு ஹரீஸ் கடும் எச்சரிக்கை

 

 
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்களைக் கொண்டு இந்த நாட்டின் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாருங்கள் இல்லையேல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனையின்போது 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கெதிராக வாக்களிக்க வேண்டி ஏற்படுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (7) புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்ட எச்சரிக்கையினை விடுத்தார்.
 
பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மீண்டும் இந்த நாட்டில் இன்னுமொரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த சபையில் நான் பேசிக்கொண்டிருக்கின்றபோதும் கூட கண்டி பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான இன வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் சேதமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  
 
இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிராக இனவாத வன்முறைகளை தோற்றுவிக்கின்ற குழுக்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட மூலங்களைக் கொண்டுவர வேண்டுமென்று நான் உள்ளிட்ட இந்த நாட்டின் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் பெரும்பான்மை தேசிய கட்சிகளின் சில பிரதிநிதிகள் இந்த நல்லாட்சி அரசுக்கு பல முறை கூறியிருந்தோம்.  
 
குறிப்பாக மதங்களுக்கு எதிரான மத நிந்தனைச் சட்டம், அதேபோன்று மதஸ்தளங்களை தாக்குகின்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலான சட்டம், இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற தனி நபர்கள் மற்றும் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் போன்ற பல சட்டமூலங்களைக் கொண்டுவந்து இவ்வாறான இனவாத செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்று பல முறை இந்த சபையிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாங்கள் கூறியிருக்கின்றோம்.  
 
ஆனால் அவ்விடயத்தில் இந்த நாட்டின் அரசும் அதன் தலைமையும் கவனையீனமாக இருந்ததனால் இன்று இன வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காத அளவுக்கு நடைபெறுகின்றன. அம்பாறை நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொண்டபோதிலும் பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அசமந்தமாக செயற்பட்டதனால் அந்த அநீதிகள் இடம்பெற்றன. 
 
அம்பாறைச் சம்பவத்தைத் தொடர்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான இனவாதத் தாக்குதல் சம்பவங்கள் ஏனைய பிரதேசங்களில் நடைபெறாமல் பாதுகாப்பதற்கும் குறித்த இனவாத தாக்குதலுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் பிரதமர் அம்பாறை நகருக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தோம். அதற்கமைவாக கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறைக்கு வருவதாக இருந்தது, அதற்கு அம்பாறையில் இருந்த ஒரு அமைச்சர் தடையை ஏற்படுத்தினார். 
 
பாதிக்கப்பட்ட அம்பாறை பிரதேசத்திற்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட பள்ளிவாசலை பார்வையிடுவதற்கு கூட பிரதமருக்கு தைரியமில்லாமல் இருந்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்தும் கொடுத்த அழுத்தம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (04) ஒலுவில் பிரதேசத்திற்கு துறைமுக அபிவிருத்தி என்ற போர்வையில் வந்து அங்கு எமது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார். 
 
இதன்போது இவ்வாறான கோரத்தனமான இனவாதத் தாக்குதல்கள் அம்பாறையுடன் முடிந்துவிட வேண்டும், திகன பிரதேசத்தில் இனவன்முறைச் சம்பவம் ஏற்படும் வகையிலான ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்படுவதாக எனக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது எனவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அப்பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்று கூறியிருந்தோம். ஆனால் பிரதமர் எவ்விதமான நடவடிக்கையினையும் எடுக்கவில்லை, அதற்கு அடுத்த நாள் கண்டி பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைச் சம்பவங்கள் தோற்றுவிக்ப்பட்டன.  
 
நான்கு முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலால் சிகிச்சை பலனின்றி சிங்கள இளைஞர் உயிரிழந்தார். குறித்த முஸ்லிம் இளைஞர்கள் செய்த அந்த கொடூரத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அந்த பெரும்பான்மை சகோதரர் அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார். அதை நியாயப்படுத்த எந்தக் கட்டத்திலும் நாங்கள் தயாரில்லை. ஆனால் அந்த விடயத்தை மையமாக வைத்து இனவாத குழுக்கள் திகன நகரில் காட்டுமிராண்டித் தனமாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். 
 
குறித்த பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நான் அன்றிரவே சென்றிருந்தேன். அங்கு முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள் வியாபார ஸ்தலங்கள் அழிக்கப்பட்டிருந்தன. ஒரு முஸ்லிம் இளைஞரும் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இப்பிரதேசங்களில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தால் இப்பேரழிவு ஏற்படுவதனை தடுத்திருக்க முடியும். 
 
தற்போது ஜனாதிபதி அவசரகால சட்டத்தை ஏற்படுத்திய பின்னர் இராணுவம் உள்ளிட்ட ஏனைய படைகள் அப்பிரதேசங்களில் முகாமிட்டிருக்கின்றன. இருந்தபோதிலும் நேற்று இரவும், தற்போது பேசிக் கொண்டிருக்கின்ற போதும் கூட கண்டி மாவட்டத்தில் பல இடங்களில் மிகப் பெரிய கொடூரத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் தங்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காக காடுகளுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பிரதேசங்களில் சரியான பாதுகாப்பு முறைமைகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கு முழுப் பொறுப்பினையும் இந்த அரசு எடுக்க வேண்டும் என்பது எமது சமூகத்தின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. 
 
இந்த நாட்டில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ்  போன்ற பெரும் படைகளை வைத்திருக்கின்ற இவ்வரசு ஒரு மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செய்வதற்கு ஏன் தயங்கியது?, அல்லது வேண்டுமென்று தங்கெழுக்கு எதிராக வந்திருக்கின்ற நம்பிக்கை இல்லாப் பிரேரனை அதேபோன்று மத்திய வங்கி குற்றச்சாட்டுகளை வேறு திசைக்கு மாற்றுவதற்காக இவ்வாறான இனக்கலவரங்கள் அரசுக்கு தேவைப்படுகின்றதா? என்று எமது முஸ்லிம் சமூகம் சந்தேகப்படுகின்றது.
 
யுத்தத்தினால் பெரும் அனுபவம் கொண்ட இந்நாட்டில் ஒரு வன்முறை இடம்பெறப்போகின்றது எனும்போது, தற்போதுள்ள நவீன வசதிகளுக்கேற்ப ஜி.பி.எஸ் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் இருக்கின்ற பிரதேசங்களையும் பள்ளிவாசல்களையும் இலகுவில் அடயாளங் கண்டு ஆயிரக் கணக்கான படைவீரர்களை ஓரிரு மணித்தியாலங்களுக்குள் அப்பிரதேசங்களுக்கு அனுப்பி அம்மக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாக்கின்ற வாய்ப்பு இந்த நாட்டின் அரசுக்கு இருந்தது. ஆனால் ஏன் இதைச் செய்ய தவறியுள்ளார்கள் என்பதுதான் எங்களுடைய கேள்வியாக இருக்கின்றது. 
 
நேற்று கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் எதிர்ப்பு நடவடிக்கையில் முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டார்கள். அகிம்சையை பேணுகின்ற முஸ்லிம் இளைஞர்களும் பொதுமக்களும் இன்று கட்டுக்கடங்காமல் கற்கலை கையில் எடுத்திருக்கின்றார்கள், நாளை அது ஆயுதங்களாக மாறுகின்ற சூழ்நிலை வந்தால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்.
 
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சபா பீடத்திற்கு முன்பாக அமர்ந்து போராடியபோது அதனை ஏழனமாக பார்த்தார்கள், ஆளுங்கட்சியில் இருக்கின்ற பல அமைச்சர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரி செய்யப்பட்டு விட்டது, எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறினார்கள். ஆனால் நடந்ததென்ன?, அன்று நாங்கள் போராட்டம் நடத்திய ஓரிரு மணித்தியாலங்களின் பின்பு மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கப்பட்டது, மெனிக்கின்ன பிரதேசத்தில் பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டது, அதேபோன்று அக்குறனை, அம்பத்தெனிய, கடுகஸ்தோட்ட என்று கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இனவாத வன்முறைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு நிலமையில் இந்த அரசாங்கத்தில் இருப்பதையிட்டு வெக்கமாகமடைகின்றேன்.
 
எங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு எம் சமூக இளைஞர்கள் கோருகின்றனர். இன்று அரசியல் ரீதியாக நாம் நிர்வாணப்படுத்தப் பட்டுள்ளோம். அந்த அளவுக்கு இன்று நிலமை மாறி இருக்கின்றது. இந்த நாட்டின் நாலாபுறமும் இருக்கின்ற முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாப்பதற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடைய அதி உச்ச அதிகாரத்தைக் கொண்டு படைகளுக்கு அதிகாரங்களைக் கொடுத்து இந்த சிறுபான்மை சமூகங்களை பாதுகாருங்கள். இல்லாதுபோனால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை வருகின்றபோது 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கெதிராக வாக்களிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வரும் என்பதை எச்சரிக்கையாக இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 

கண்டி வன்முறை; பிரதான சந்தேக நபர் உட்பட 81 பேர் கைது

கண்டி வன்முறை; பிரதான சந்தேக நபர் உட்பட 81 பேர் கைது

கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமான இருந்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

பிரதான சந்தேக நபர் உட்பட 10 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை கடந்த 4ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரையான தினங்களிலும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதிகளிலும் 71 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்தார்.

திகன மற்றும் பூஜாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கண்டி மாவட்ட நிர்வாக எல்லைகளில் இன்று மாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை முற்பகல் 9 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்தார்.

கண்டியில் மீண்டும் ஊரடங்குசட்டம் - பிரதான சந்தேகநபர் கைது

 

 

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களையடுத்து பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கண்டியில் மீண்டும் ஊரடங்குசட்டம் - பிரதான சந்தேகநபர் கைது

கண்டியில் கடந்த மூன்று தினங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊடரங்குச் சட்டம் இன்று வியாழக்கிழமை முப்பகல் 10 மணிக்கு இரத்து செய்யப்பட்டது.

ஊரடங்கு சட்டம் நேற்று மாலை 4 மணி தொடக்கம் இன்று மாலை 4 மணி வரையான 24 மணிநேரத்திற்கு அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முற்பகல் 10 மணிவரை மட்டுப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.

கண்டி – தெல்தெனிய பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று தாக்கி படுகொலை செய்ததை அடுத்து கலவரங்களும் வன்முறைகளும் ஏற்பட்டன.

இதனிடையே முஸ்லிம் பள்ளிவாசல்கள் பலவற்றின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளும் உடைக்கப்பட்டு தீமூட்டப்பட்டன.

இந்த சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பலியாகியிருந்தார்.

இதேவேளை, கண்டி – பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கைகுண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு நேற்று புதன்கிழமை சுமார் 10 பேர் வரை கண்டி பொது வைத்தியசாலையில் காயங்களுடன் சேர்க்கப்பட்டனர்.

மேலும் திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்ந்து அக்குறனை, கட்டுகஸ்தோட்டை, மாத்தளை உள்ளிட்ட பல இடங்களுக்கும் பரவின.

இதனையடுத்து மூன்று நாட்களுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு 6 வருடங்களுக்குப் பின்னர் முதன்முறையாக நாடு முழுவதிலும் அவசர காலச் சட்டம் அறிவிக்கப்பட்டது.

கலவரங்களும், வன்முறைகளும் இடைக்கிடையே இடம்பெற்ற நிலையில், நேற்று மாலை 4 மணிமுதல் இன்று மாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் அந்த ஊரடங்குச் சட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பொலிஸாரும், முப்படையினரும் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து இன்று வியாழக்கிழமை குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட 09 பேர் கைது செய்யப்பட்டதோடு இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு - நாளை கடையடைப்பு இல்லை!

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் முழு கதவடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருந்தது.

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு - நாளை கடையடைப்பு இல்லை!

இதற்கு வவுனியா நகர பள்ளிவாசல் நிர்வாகம், வவுனியா வர்த்தக சங்கத்திடம் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், ஆதரவு வழங்குவதற்கு வவுனியா வர்த்தக சங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாளைய தினம்(09-03-2018) அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுக்கும் நோக்கில் இன்றைய தினம்(08-03-2018) வவுனியா நகர பள்ளிவாசலுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு - நாளை கடையடைப்பு இல்லை!

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு - நாளை கடையடைப்பு இல்லை!

கண்டி மாவட்டத்தில் பதற்றத்தை தோற்றுவித்தவர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது

 

கண்டி மாவட்டத்தில் பதற்றத்தை தோற்றுவித்தவர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பாடத்தினை கற்றுக்கொடுத்திருக்கும் என நம்புவதாக இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்;தார்.

 
 
கண்டியியில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
நினைத்து பார்க்க முடியாத ஒரு சிறிய சம்பவம் ஒன்றினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களே இந்த பிரச்சினைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் துரதிஸ்ட்ட வசமாக அந்த சிறிய சம்பவமானது பாரிய தூரத்திற்கு பயணித்துள்ளது இந்த வேளையில். இலங்கை கடற்படை, விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து, மக்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 
கட்சி பேதமின்றி இனபேதமின்றி முஸ்லிம் சிங்கள, மற்றும் தமிழ் மக்களின் பாதுகாப்பினை பாதுகாப்பு தரப்பினரே உறுதிபடுத்த வேண்டும். அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாங்கள் கண்டியின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பினை பலபடுத்தி நிலைமைய கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். 
 
தற்போது உங்களுக்கு பார்க்க முடியும், ஏற்கனவே காணப்பட்ட நிலையிலிருந்து பாரிய மாறுபாடான அதவது சுமூகமான நிலை காணப்படுகின்றது.
 
சில சில சம்பவங்கள் காணப்பட்டாலும், நாடு வீழ்ச்சியில் சென்றாலும் நாங்கள் இந்த கண்டியில் நிலைக்கொண்டுள்ளோம் ஏனெனில் மக்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்காகவே ஆகும்.
 
மேலும் நான் இராணுவத்தளபதியானாலும் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றேன்... கண்டியில் மிகவும் நல்லெண்ணம் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களிடத்தில் குரோதத்தை கட்டியெழுப்ப வெளிமாவட்டங்களிலிருந்து சிலர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் தரப்பில் அல்லது பாதுகாப்பினரின் தரப்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் மேற்கொள்வோம் என இராணுவத்தளபதி தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களையும் கட்டாயமாக வேண்டிக் கொள்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகளைக் கவனத்திற்கொண்டு இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான புனித ஜும்ஆவுடைய தினமாகிய நாளை (2018.03.9) பின்வரும் ஒழுங்குகளைக் கவனத்திற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களையும் கட்டாயமாக வேண்டிக் கொள்கின்றது.
 
1)ஜும்ஆவுடைய நேரத்தில் மஸ்ஜித்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபாரஸ்தலங்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துகொள்ளுமாறும், தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் சகோதரர்கள் ழுஹ்ர் தொழுகையைத் தொழுதுகொள்ளலாம். இவர்களுக்கு ஜுமுஆக் கடமையாகமாட்டாது.
 
 
2)ஓர் ஊரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மஸ்ஜித்களில் ஜும்ஆக்கள் நடைபெறும் வழமை இருந்தால், அம்மஸ்ஜித்களின் ஜும்ஆவுடைய நேரத்தை நிர்வாகிகள் தங்களுக்குள் கலந்துரையாடி தேவைப்படின் வித்தியாசப்படுத்திக் கொள்ளலாம்.
 
3)முஸ்லிம்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பாதுகாப்பு படையினருடன் ஒத்துழைப்பு, பண்பாடு, புரிந்துணர்வுடன் நடந்துகொண்டு தமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும்.
 
4)குத்பாப் பிரசங்கத்தையும் தொழுகையையும் ஜம்இய்யாவினால் வழங்கப்பட்டுள்ள மாதிரி குத்பாவை முன்வைத்து, இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேற்படாத வகையில் சுருக்கிக் கொள்ளுமாறும் வேண்டிக்; கொள்கின்றோம்.
 
5)தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகள் அனைத்து முஸ்லிம்களையும் ஆழ்ந்த கவலைக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாக்கியிருக்கும் இந்நிலையில், அவர்களுக்கு மன ஆறுதலாகவும் முஸ்லிம்களின் உணர்வுகள்; பாதகமான முறையில்; தூண்டப்படாமலும் குத்பாப் பிரசங்கத்தை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
 
 
6)நாட்டு முஸ்லிம்களினதும் உலக முஸ்லிம்களினதும் நிலமைகள் சீராகி நிம்மதியாகவும் கண்ணியமாக வாழ துஆ, இஸ்திக்ஃபார், நோன்பு, சதகா, போன்ற நல்லமல்களின் மூலம் அல்லாஹ{தஆலாவின் பக்கம் மக்களைத் திசை திருப்புதல் வேண்டும்.
 
7)அவசரகால சட்டம் நாட்டில் அமுலில் உள்ளதால் ஜும்ஆ முடிந்தவுடன் நாட்டுச் சட்டத்தை மதித்து அமைதியாக கலந்துசென்று தத்தமது வேலைகளில் ஈடுபடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
 
 
 
 
இவ்வண்ணம்
 
 
 
 
அஷ்-ஷைக் இல்யாஸ் மஹ்மூத் 
 
செயலாளர் 
 
பத்வாக் குழு 
 

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை ஆறு மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம்

 
கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை ஆறு மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் அமுலாகிறது.
 
நாளைக் காலை ஆறு மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
 
கண்டியில் நிகழ்ந்த அசம்பாவிதங்களால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள், வர்த்தக நிலையங்கள் அடங்களாக 45 உடமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 4 வணக்கஸ்தலங்களும், 11 வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
 
இங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட இராணுவ வீரர்கள் இரண்டாயிரத்து 500 பேரை அனுப்பியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்தபத்து அறிவித்தார்.


இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பிஇ வதந்திகளை கட்டவிழ்த்து மோசமான நிலைமையை ஏற்படுத்த வழிவகுத்ததாக சந்தேகிக்கப்படும் 10 நபர்கள் கைதானார்கள். இவர்களில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
 

தேர்தல்  களம்

donpaned official media

எதிர்வரும் உள்ளுராட்சி ன்ற தேர்தல் 2018 ஊடகப்பிரிவு

I'm a paragraph. Click here to add your own text and edit me. I'm a great place for you to tell your story and let your visitors know a little more about you.

Don paned News

Al-haj hmm. Hmm. Harees LLB ( Deputy minister of sports and deputy  leader of Sri Lanka Muslim Congress )

"சமூகத்திற்கு பாதிப்பு இல்லாத மா நகர பிரிப்பு""சிந்தியுங்கள் செயற்படுங்கள்

________________________________________________________

 

கல்முனை இரண்டாகப் பிரிந்து போனால் சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேசபை கிடைக்கும். ஆனால் அந்த நாள்தான் கல்முனையின் வரலாற்றில் அடிக்கப்படும் சாவு மணியாக இருக்கும்.அத்தோடு கல்முனை என்ற முஸ்லீம்களின் அடையாளம் அழிந்து போகும்.

 

சாய்ந்தமருதுக்கும் பிரதேச சபை வேண்டும்.அதே நேரம் கல்முனையும் பாதிக்கப்படக்கூடாது.

அதற்கு வழி கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிப்பது.

 

பிரியவே வேண்டும் என்று சாய்ந்தமருது மக்களும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கல்முனை மக்களும் இருக்கும்போது இரண்டு ஊர்களுக்கும் வாசியான பிரிப்பில் இரண்டு ஊர்களும் உடன்பட்டுக் கொள்வதில் எது உங்களைத் தடுக்கிறது.

 

நான்காகப் பிரிக்கும் கோஷத்தை இரண்டு ஊர்களும் ஒன்றாகச் சேர்ந்து முன்வையுங்கள்

 

சாய்ந்தமருதுக்குப் பிரதேச சபை வேண்டும்.ஆனால் அது நான்காகப் பிரிய வேண்டும் என்பதை இரண்டு ஊர்மக்களும் ஒன்றாகக் கேளுங்கள்.அதில் எல்லைப் பிரச்சினை வந்தால் இரண்டு ஊரும் ஒரு தரப்பில் இருந்து ஏனையவர்களோடு பேசுங்கள்.

 

சாய்ந்தமருத்துக்குப் பிரதேச சபை கிடைக்க வேண்டும் என்பதில் இரு ஊர்களும் உடன்பட்டுக்கொண்டு ஆனால் எப்படிப்பிரிக்கவேண்டும் என்பதில் நீங்கள் கீரியும் பாம்புமாக இருந்து கொண்டிருப்பதில் கொண்டாடப் போவது கூத்தாடிதான்.இழக்கப்போவது கிழக்கிலங்கையின் முஸ்லிம் என்ற எமது மண்ணின் அடையாளத்தைத்தான்.

 

ஒன்றாக இணையுங்கள்.ஒன்றாகப் போராடுங்கள்.ஒன்றாகக் கடையடையுங்கள்.ஒன்றாகக் கூட்டம் போடுங்கள்.ஒன்றாகச் சேர்ந்து நில்லுங்க்கள். அதைத் தவிர இதை வெல்வதற்கு வேறு வழியில்லை.

 

தற்பொழுது 75 : 25 என இருக்கும் கல்முனையின் சனத்தொகை வீதம் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கிடைக்குமிடத்து 55 : 45 என மாறக்கூடிய அபாயம் உண்டென அஞ்சப்படுகின்றது இது எதிர்காலத்தில் கல்முனையில்  முஸ்லீம்களின் இருப்பை கேள்விக்குறியாக்க கூடிய ஒன்று அதனால்தான் யாருக்கும் சேதாரமில்லாத வகையில் கல்முனை மாநகரை  நான்காக பிரித்து வழங்க கூடிய முடிவுக்கு ஹரீஸ் அவர்கள் வந்திருப்பது புத்திசாதுரியமான ஒரு விடயம். என்றே சொல்ல

Don_paned

கல்முனை நான்கு பிரிப்பு

#don_paned

சாய்ந்தமருதுவினை தனியாக பிரித்தால்,  கல்முனை மக்கள் எதிர்நோக்க இருக்கும் எதிர்கால பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நான்காக பிரிக்கபட வேண்டும் என்ற கல்முனை மக்களின் வேண்டுகோளை ஏற்ற பிரதியமைச்சர் ஹரீஸ்.

TO OUR RESIDENCE

Visit of Hon.Rauff Hakeem  (National leader of Sri Lanka Muslim Congress and minister of city planning &water supply) to our  residents

கல்முனை நகர சபையின் முன்னாள் தவிசாளர் சாஹுல் ஹமீத் (பள்ளிக் காக்கா) அவர்களின் வீட்டுக்கு இன்று (12) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

STOP... KILLING....  STOP..

Organization of ISLAMIC  countries (ORG)  OPEN  YOUR EYE ON ROHINGIYA MUSLIM


Happy  Teacher's Day

@don_paned

Teachers' Day is a special day for the appreciation of teachers, and may include celebrations to honor them for their special contributions in a particular field area, or the community in general.

Today feeling

/don_paned

😄Division and anger are not to forget someone ...

😄Make the seed of ambition ... the water of the initiative ... the fertility of the fertilizer ... the fruit of victory ...

being a girl is not easy because most of people taking about

Donpaned

Happy Eid Mubarak

Jummah Mubarak

RAMADAN KAREEM

Eid-Ramadan

I wish you a very happy and peaceful ramdan.may ALLAH accept your good deed,forgive your transgressions and ease the suffering of all people's around the globe. MESSAGE FROM-DONPANED

hide not your talents,they for use were made,What's sundial

Donpaned